Thursday, July 22, 2010

ஸ்ரீரெங்கம் பங்குனி உத்திர பெருவிழா


மூலவர்  பெரிய  பெருமாள்  உற்சவர்  – அழகிய   மணவாளன்  – நம்பெருமாள்  உபய  நாச்சியார் உடன்
ஸ்ரீமதே  ராமானுஜாய நம:
ஸ்ரீரெங்கம் என்றாலே திருவிழாதான். திருவிழா என்றாலே ஸ்ரீரெங்கம்தான்.ஒவ்வொரு திருவிழாவும் ஒவ்வொரு அழகு.இங்கே திருவிழாவுக்கு பஞ்சமில்லை.
ஸ்ரீரெங்கம் பெருமாளின் சயனம் அனந்தமே, அவன் திருவடி அழகை காண காண அனந்தமே, அவன் திருமுகமோ கொள்ளை அழகு,அவன் அருள் புரியும் அழகை தனி. அரங்கனின் அழகில் மயங்கிய திருப்பாணாழ்வர் தன்னுடைய அனுபவத்தை அமலனாதிபிரான் 10 வது பாசுரத்தில்

"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே "

இந்த பாசுரத்தை கேட்டவுடன் அரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் மேனியோடு சேர்த்துக் கொண்டார். ஆழ்வார் அரங்கனோடு ஐக்கியமானார்.பெருமாளின் நடை அழகு,வையாளி அழகு. ஒவ்வொரு அலங்காரமும் ஒவ்வொரு அழகு.

ஸ்ரீரெங்கநாச்சியார் தாயாரோ மிகவும் அற்புதமான தாயார். பார்க்க பார்க்க திகட்டாத பேரின்பம்.

அத்தகைய அழகும்,அன்பும்,கருணையும் பொருந்திய நம்பெருமாளும் தாயாரும் ஆண்டுத்தோறும்.பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று ஒரு நாள் மட்டும் சேர்ந்து எழுந்து அருளும் நன்னாளே பங்குனி உத்திர திருவிழா ஆகும்.

அன்று காலை பெருமாள் வீதி வலம் வந்து தாயார் சன்னதி வாயில் நுழையும் போது தாயார்  பெருமாள் மீது  கோபம் கொண்டு ( பெருமாள் உறையூர் சென்று கமலவல்லி நாச்சியார் உடன்  அருளியதால் ஏற்பட்ட கோபம் பொய் கோபம்.அது 6ம் திருநாள்.இது 9ம் திருநாள்.) பழம்,பால்,தயிர் ஆகியவற்றை கொண்டு அடிப்பதும் , பின்பு இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களும் மிகுவும் கண் கொள்ள காட்சியாகும்.

நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார்

பின்பு இருவரும் தாயார் பங்குனி மண்டபத்தில் அடியார்களுக்கு அருள் புரியும் அழகே அனந்தமே.அவர்களை சேர்ந்து காண்பதே பேரின்பம் ஆகும்.பெருமாள் தன்னுடைய மாலை தாயாருக்கு சார்த்தி அவள் அழகில் உவந்து ,மகிழ்ந்து அருள் புரியும் அழகை தனி. தாயார் பூரித்து மகிழ்ந்து நிற்க்கும் அழகை காண கோடி கண்கள் வேண்டும்.தாயாரின் இதழ்கள் இடையே தவழும் புன்னகை காண காண ஆனந்தமே. கண் கொள்ள கட்சியாகும்.

எத்தகைய சுழ்நிலையிலும், துன்பத்திலும்   உன் அருளால் உன்  மீது கொண்ட அன்பு மாறாத  வரம் வேண்டும்.அரங்கனே என் அமுதன்



நம்பெருமாள் -தாயார் சேர்த்தி சேவை. காண காண  கண் கொள்ள காட்சி







தம்மை நம்பி வந்த அடியார்களின் துயர் துடைப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.அன்றைய தினம் இராமானுஜரின் சரணாகதி ( வைஷ்ணவத்தின் மூக்கியமான கோட்பாடு) கத்யம் சேவிக்கபடுவதை இதற்குக்கு சான்றாகும்.

பங்குனி  கோரதம் புறப்பாடு.சரண் அடைந்தவர்களை எத்தகைய சுழ்நிலையிலும் கை விட மாட்டான் அரங்கன்.

நாம்  நம்பெருமாள்  மீது   அறியாமல்  பற்று வைத்துவிட்டாலும், நாம்  மறந்தாலும்  அவன்  நம்மை மறவாமல்  நம்மை காத்து   அருள்வான்.

I have great heart and passion for srirengam temple. I will soon start my next  post on  “Srirengam Vaikuta ekadesi thiruvizha" .It is really very pleasure to see arengan and hear arayar sevai (Divya Prabhandham) on vaikuta ekadesi thiruvizha.Very great pleasure and wonderful experience indeed in sharing this beautiful thiruvizha with you.

 I am hereby thanking my friend karthiga for panguni uthira  peruvizha photos.
 Thanks for spending your valuable time.

 I hope you all  have a glimpse of “panguni uthira peru vizha” .
 Happy blogging......(rather than debugging and coding).